திருவெம்பாவை – 1
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.
திருப்பாவை – 2
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்து ஏல் ஓர் எம்பாவாய்.
இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Please Subscribe Arivoli YouTube Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
– Arivoli
source